ஆப்நகரம்

நடிகர் விஜய்க்கு விதிக்கபட்ட அபாரதத் தொகைக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் அபராதத் தொகையை செலுத்த இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Samayam Tamil 27 Jul 2021, 12:37 pm
வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் சொகுசு காருக்கு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும், தன்மீது விதிக்கப்பட்டுள்ள அபாராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Actor_Vijay
Actor_Vijay


நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். இந்தக் காருக்கு நுழைவுவரி செலுத்தாத காரணத்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவுசெய்யப்படவில்லை. அதையடுத்து விஜய் வாங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தவிட்டார்.

தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்: நாளை வெளியாகிறது 'D43' படத்தின் பர்ஸ்ட் லுக்!
மேலும், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார் நீதிபதி. இந்நிலையில் இந்த வழககில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தையும் எதிர்த்தும் நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் 1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நீதிமன்றம் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரித் தொகை குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்