ஆப்நகரம்

Leena Manimekalai: ‘காளி’ போஸ்டர் விவகாரத்தில் சிக்கிய லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.!

கடந்த இரு தினங்களாக கடும் சர்ச்சைகளை கிளப்பி வரும் ‘காளி’ ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 6 Jul 2022, 7:41 am
கடந்த இரண்டு நாட்களாக லீனா மணிமேகலை இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இந்த போஸ்டருக்கு எதிர்ப்புகள் கிளம்பி, இவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் லீனா மணிமேகலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Leena Manimekalai
Leena Manimekalai


லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்ற போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் கடந்த இருதினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் லீனா மணிமேகலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதாக இயக்குனர் சுசி கணேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசி கணேசன் மனுவில் முகாந்திரம் இருப்பதாக கூறி லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட தடைவிதித்தது. இதையும் மீறி சமூக வலைத்தளங்களில் சுசி கணேசனுக்கு எதிராக லீனா மணிமேகலை தொடர்ந்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

Vijay: விஜய்யிடம் பலமுறை சொல்லிட்டேன்: எஸ்.ஏ. சந்திரசேகர் வருத்தம்.!

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தவறான கருத்துக்களை ஏன் வெளியிடுகின்றனர் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என லீலா மணிமேகலைக்கு வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து ஜூலை 21-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறி இவ்வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்