ஆப்நகரம்

சேரனின் புதிய படைப்பு ‘திருமணம் : சில திருத்தங்களுடன்’!

‘திருமணம் : சில திருத்தங்களுடன்’ என்ற புதிய படத்தை இயக்குனர் சேரன் தற்போது இயக்கவுள்ளார்.

Samayam Tamil 12 Dec 2018, 5:20 pm
இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஒரு புதிய படத்தை இயக்கிவுள்ளார். இந்தப் படம் பற்றி சேரன் கூறுகையில், ‘‘ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டேன். வரும் டிசம்பர் 12ம் தேதி என் பிறந்த நாளில் அதுபற்றி முறையாக தெரிவிக்கிறேன்‘‘ என்றார்.
Samayam Tamil vijay-sethupathi-reveals-cheran-s-next-cheran-birthday-special-


தற்போது இயக்குனர் சேரன், ராஜ்குமார் இயக்கத்தில் ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சேரன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சேரன் தன்னுடைய அடுத்தப் படத்திற்கு ‘‘திருமணம் : சில திருத்தங்களுடன்’ என்ற தலைப்பு வைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்