ஆப்நகரம்

‘கற்றது தமிழ்’ குழந்தை நட்சத்திரம் கதாநாயகியானார்!

ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

TNN 9 Sep 2017, 4:52 pm
ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil child actress venba became heroine
‘கற்றது தமிழ்’ குழந்தை நட்சத்திரம் கதாநாயகியானார்!


இயக்குனர் ராம் இயக்கிய முதல் படமான ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆனந்தி கேரக்டரில் நடித்தவர் வெண்பா. முதல் படத்தில் சிறப்பாக நடித்தவர் அதன்பின்னர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்தார்.
இப்போது ‘காதல் கசக்குதய்யா’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் பள்ளி மாணவியாக, ஹீரோ துருவாவை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக நடித்து வரும் ‘பள்ளி பருவத்திலே’ படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்த படங்களைத் தொடர்ந்து என் திறமைக்கு சவால் விடக் கூடிய அழுத்தமான கதாநாயகி வேடங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறினார் நடிகை வெண்பா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்