ஆப்நகரம்

விஜய்யை இந்தியாவின் ஜாக்கிஜானாக கொண்டாடிய சீன ரசிகர்கள்!

சீன ரசிகர்கள், நடிகர் விஜய்யை இந்தியாவின் ஜாக்கிஜானாக கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 24 Oct 2017, 1:03 pm
சீன ரசிகர்கள், நடிகர் விஜய்யை இந்தியாவின் ஜாக்கிஜானாக கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil china people celebrated vijay as jackie chan of india
விஜய்யை இந்தியாவின் ஜாக்கிஜானாக கொண்டாடிய சீன ரசிகர்கள்!


விஜய் நடிப்பில் தமிழில் உருவான ‘மெர்சல்’ படம் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் ‘மெர்சல்’ படம் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு வைத்து வெளியாகி இருக்கிறது. ‘மெர்சல்’ படத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் ரேக்ஸ், இவரை பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

அண்மையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‘காவலன்’ படப்பிடிப்பின் போது, சீனாவில் நடந்த ஷாங்காய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெல் விழாவிற்கு நடிகர் விஜய்யுடன் நானும் கலந்து கொண்டேன். விழாவிற்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய்யை இந்தியாவின் ஜாக்கி ஜான் என்று பெருமை கொண்டாடினார்கள். அப்போது விஜய்யும் ரசிகர்களின் அன்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார் ‘’ என்றார்.

China people celebrated Vijay as Jackie Chan of India

அடுத்த செய்தி

டிரெண்டிங்