ஆப்நகரம்

சுசிலீக்ஸ் சர்ச்சையால் சிக்கலை அனுபவித்து வரும் பாடகி சின்மயி!

சுசிலீக்ஸ் சர்ச்சையால் பாடகி சின்மயி மீண்டும் பல சிக்கல்களை அனுபவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2018, 1:35 pm
சுசிலீக்ஸ் சர்ச்சையால் பாடகி சின்மயி மீண்டும் பல சிக்கல்களை அனுபவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
Samayam Tamil chinmayi-Suchithra


கடந்த ஆண்டு பரபரப்பான சுசிலீக்ஸை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த பிரச்னையில் சிக்கியவர்களில் பாடகி சின்மயியும் ஒருவர்.

தற்போது பாடகி சின்மயி, இதனால் தனக்கு தொடர்ந்த்து பல்வேறு சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். இளைஞர் ஒருவர் அவருக்கு தினம் தினம் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருகிறாராம்.


ஏன் என கேட்டதற்கு “சுசிலீக்கில் நீ யார், எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியெல்லாம் தெரியவந்துவிட்டது. நீ பலருடன் (சொல்லக்கூடாத வார்த்தைகள்) செய்துதான் இப்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறாய்” என பதில் வந்துள்ளது. இது பற்றி சின்மயி தன்னுடைய பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்