ஆப்நகரம்

பேத்தியின் செம கியூட்டான நடனம்: சிரஞ்சீவி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்

தனது ஒரு வயது பேத்தி பாடலை ரசித்து நடனம் ஆட முயற்சிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி.

Samayam Tamil 28 Apr 2020, 6:28 pm
தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் தான் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். தான் செய்யும் பல விஷயங்கள் பற்றி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் அவர்.
Samayam Tamil Chiranjeevi with his Grand Daughter


தற்போது அவர் தனது பேத்தி உடன் இருக்கும் வீடியோ ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தில் வரும் பாடல் ஒன்றை கேட்டு சிரஞ்சீவி மற்றும் பேத்தி நிவிஷா இருவரும் ஆடுகின்றனர். ஆரம்பத்தில் என்ன பாடல் வேண்டும் என சிரஞ்சீவி கேட்க இந்த பாடல் தான் வேண்டும் என அடம்பிடித்து போடவைக்கிறார் அவர்.

You And Me பாடலுக்கு கியூட்டாக ஆடுகிறார் நிவிக்ஷா. லாக்டவுனுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ அது என சின்ராஜீவி கூறியுள்ளார்.

"மியூசிக்கின் பவரை பார்த்து நான் எப்போதும் வியக்கிறேன். இப்போது தான் ஒரு வயது ஆகிறது, தற்போதே இசையை இவர் எப்படி ரசிக்கிறார், நடனம் ஆடவும் முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு ரசிக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே நான் பாடலை நிறுத்தி மீண்டும் போட்டேன்" என சிரஞ்சீவி கூறியுள்ளார்.


சிரஞ்சீவி வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால் "OMG எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்டர்நெட்டில் கியூட்டான குட்டி டான்ஸர் இவர்தான்" என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்