ஆப்நகரம்

Kadaram Kondan Collection: பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் சாதனை படைத்த சியான் விக்ரம்!

விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2019, 1:29 pm
இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடண்டஹ் 19ம் தேதி வெளியான படம் கடாரம் கொண்டான். வழக்கம் போல் தனது அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை தேர்வு செய்து சியான் இப்படத்தில் நடித்துள்ளார். அதனால், தான் என்னவோ இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முன்னதாக இப்படத்தில் கமல் ஹாசன் தான் நடிக்க இருந்தது. ஆனால், அப்போது அவர் அரசியலில் ரொம்பவே பிஸியாக இருந்ததால், சியான் விக்ரமிற்கு இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Samayam Tamil chiyaan 2


உலகம் முழுவதும் வெளியான இப்படம் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் 3 நாட்கள் முடிவில் ரூ.1.75 கோடி குவித்து முலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தி லயன் கிங் 2ஆவது இடமும், ஆடை 3ஆவது இடமும், கூர்கா படம் 4ஆவது இடமும், சூப்பர் படம் 5ஆவது இடமும் பிடித்துள்ளது.

The Lion King: சிங்கத்திற்கு கிடைத்த வசூல் அமலா பால், விக்ரமிற்கு இல்லையா? சாதனை படைத்த தி லயன் கிங்!


சரி, சென்னையில் முதலிடம் பிடித்த கடாரம் கொண்டான் உலகளவில் ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.50 கோடி வரை வசூல் குவித்துள்ளது என்கிறது தகவல். ஆனால், தி லயன் கிங் படம் உலகளவில் ரூ.54 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஆடை படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் ஓரளவு வரவேற்பு மட்டும் பெற்று வருகிறது.



இதற்கு முன்னதாக சியான் நடிப்பில் வந்த ஸ்கெட்ச் மற்றும் சாமி ஸ்கொயர் ஆகிய இரு படங்களை விட கடாரம் கொண்டான் படம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. சாமி ஸ்கொயர் படத்தின் முதல் நாள் ரூ.64 லட்சம் மட்டுமே வசூலை குவித்துள்ளது. ஆனால், கடாரம் கொண்டான் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கிய சாமி ஸ்கொயர் படம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் ரூ.40 கோடி வரையில் மட்டுமே ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்துள்ளது என்றும் விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விஜய் சந்தர் இயக்கத்தில் வந்த ஸ்கெட்ச் படம் ரூ.29 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், உலகளவில் ரூ.24 கோடி மட்டுமே ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில், சியான் விக்ரம் நடிப்பில் வந்த இரு முகன், 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு சியான் விக்ரம் நடிப்பில் வந்த படம் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது என்றால், அது கடாரம் கொண்டான் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்