ஆப்நகரம்

சூப்பர்ஸ்டாருடன் 'கபாலி' படம் பார்த்த சோ ராமசாமி 'மகிழ்ச்சி'

சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகியுள்ள 'கபாலி' படத்தை அரசியல் விமர்சகர் சோ ராமசாமி, கபாலி நாயகன் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து படம் பார்த்தார்.

TNN 27 Jul 2016, 1:02 pm
சென்னை: சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகியுள்ள 'கபாலி' படத்தை அரசியல் விமர்சகர் சோ ராமசாமி, கபாலி நாயகன் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து படம் பார்த்தார்.
Samayam Tamil cho ramaswamy says magizhi after watches kabali along with superstar
சூப்பர்ஸ்டாருடன் 'கபாலி' படம் பார்த்த சோ ராமசாமி 'மகிழ்ச்சி'


இளம் இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' படத்தை ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தனது குடும்பத்தினருடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சியை பார்த்து மகிழ்ந்தார்.

'கபாலி' படம் பார்த்த சோ கூறுகையில்,'படம் நல்லா இருக்கு. நல்லா எடுத்திருக்கீங்க. ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி. ரஜினி தனக்கு நண்பராக கிடைத்ததை பெருமையாக கருதுவதாக' கூறினார். கடந்த 2 மாதங்களாக அமெரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பரான சோவுக்கு படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். அப்போது, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரம் படத்தை பார்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்