ஆப்நகரம்

யோகி பாபு வீட்ல விசேஷம்: நேரில் சென்று வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்!

யோகி பாபு மகன் விசாகனின் முதல் பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 29 Dec 2021, 12:38 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. கைவசம் அரை டஜன் படங்களுடன் பிசியாக திகழும் யோகி பாபு, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு வீட்டில் நடைபெற்ற விசேஷம் ஒன்றில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Yogi Babu
Yogi Babu


நடிகர் யோகிபாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திடீர் திருமணம் நடந்தது. அவரின் சொந்த ஊரான செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் மிகவும் எளிமையாக முறையில் யோகி பாபுவின் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக தன்னுடைய வரவேற்பு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தார்.

அதன்படி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி தேதிக்கு இரு தினங்களுக்கு முன்பாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி அவரால் ரிசப்சன் நடத்த முடியவில்லை. அதன்பின்னர் மனைவிக்கு கடந்த டிசம்பர் மாதம் வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே யோகிபாபுவிற்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது.
விஜய் சேதுபதி பட இயக்குனர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்: போலீஸ் விசாரணை!
திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என திட்டமிட்ட எதுவுமே நடத்த முடியாமல் போனா நிலையில் தற்போது தன்னுடைய மகன் விசாகனின் முதல் பிறந்தநாள் விழாவை தனது விருப்பபடி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார் யோகி பாபு. இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Sivakarthikeyan


பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், பிக்பாஸ் பிரபலம் வருண், நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த பிறந்தநாள் விழாவில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்