ஆப்நகரம்

பிறந்தது சார்வரி தமிழ் புத்தாண்டு: சினிமா பிரபலங்களின் வாழ்த்துக்கள்

இன்று தமிழ் புத்தாண்டுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ..

Samayam Tamil 14 Apr 2020, 10:00 am
விகாரி வருடம் முடிந்து இன்று புதிதாக சார்வரி ஆண்டு பிறந்துள்ளது. வழக்கமாக கொண்டாட்டங்களோடு துவங்கும் புது வருடம் இந்த முறை கொரோனா பிரச்சனை காரணமாக மிக எளிமையாக மக்கள் அவர்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil Arun Vijay Tamil new year wishes


மக்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தான் அவர்கள் தங்கள் வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளனர்.

நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோவில் "போன வருடம் விகாரி வருடம் ரொம்ப விவகாரமான வருடமாக முடிஞ்சுபோச்சு. இந்த வருடம் சார்வரி வருடம் ஒரு தீர்வை கொடுக்கும் வருடமாக இருக்க வேண்டும் என மனசார வேண்டி கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

"மேலும் பொதுவாக புத்தாண்டு என்றால் கோவில், விருந்து, டிவியில் பட்டிமன்றம், ராசிபலன் என விமரிசையாக ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருஷம் வித்யாசமாக ஆரம்பிச்சிருக்கு" என்றும் கூறியுள்ளார் அவர்.


நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "இருளை நீக்கி ஒளியை அருள இறைவனை வேண்டிக்கொண்டு, ஒற்றுமையுடன் அன்பை பகிர்வோம்.. இந்த கடின நேரத்தை வெல்வோம்... அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!" என்று கூறியுள்ளார்.


"உலக தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #வீட்டில்இரு #StayHomeStaySafe" என மக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.


நடிகை கௌதமி போட்டுள்ள ட்விட்டில் "புதிய ஆரம்பம்! கடந்து போன காலங்களில் இருந்து நாம் உணர்ந்தவைகளின் வாயிலாக ஒளிமயமான ஆரோக்கியமான வாழ்வை தொடங்குவோம்! கனவுகள் நனவாகி வசந்தம் வீசட்டும்! இந்த தனிமைபடுத்துதல் நிலையில் கூட நாம் ஒன்றிணைந்து தான் உள்ளோம்❤️ அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என கூறியுளளார்.


மற்ற சினிமா பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளின் தொகுப்பு இதோ..























அடுத்த செய்தி

டிரெண்டிங்