ஆப்நகரம்

பிரபல சினிமா தயாரிப்பாளர் திடீர் மரணம்!

பிரபல சினிமா தயாரிப்பாளர் டி. சிவபிரசாத் ரெட்டி இன்று சென்னையில் காலமானார்.

Samayam Tamil 27 Oct 2018, 4:44 pm
தெலுங்கு படவுலகில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்து வந்தவர் டி.சிவபிரசாத் ரெட்டி. இவருக்கு தற்போது 62 வயதாகிறது. இவர் நீண்ட நாட்களாக இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஓரளவு குணமாகி வந்த நிலையில் இன்று காலை இவர் திடீரென மரணமடைந்துவிட்டார். இவரது மரணம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil sivaprad-reddy


இவர் ‘காமாட்சி’ என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை 1985ம் தொடங்கினார். இதன் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான வெற்றிப் படங்கள் ‘கார்த்திகா பௌர்ணமி’, ‘சரவணா சந்தியா’, ‘விக்கி டாடா’, ‘முத்தா மேஸ்திரி’, ‘அலரி அலாடு’, ‘ஆட்டோ டிரைவர்’, ‘சீதாராம ராஜு, ‘நீனு நானு’, ‘பாஸ்’, ‘கிங்’, ‘கேடி’, ‘ரஹதா’, ‘தாதா’ உட்பட பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேலும சிவபிரசாத் ரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனாவின் நெருங்கிய நண்பரும் கூட.

அடுத்த செய்தி

டிரெண்டிங்