ஆப்நகரம்

சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

30ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

TNN 17 May 2017, 7:00 pm
30ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil cinema theatre strike postponted
சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்!



நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற பிறகு, திருட்டு விசிடி ஒழிக்க வேண்டும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். மேலும் வரும் 30ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு விஷால் அறிவித்தார். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ உள்ளிட்ட சில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில் விஷால் மற்றும் திரையுலகினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அவரிடம் திரையுலகினரின் கோரிக்கைபற்றி வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,’வரும் 30ம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் திரை அரங்குகள் மூடப்படும் என்று வரும் செய்திகள் உண்மை அல்ல, 30ம் தேதி அன்று வழக்கம்போல் அனைத்து திரைஅரங்குகளும் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாபஸ் அறிக்கையில் திரை அரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆர்.பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன் மற்றும் அந்தந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்