ஆப்நகரம்

கொரோனா ஹாலிடேஸ்: குழந்தையாகவே மாறிய சூரி.. அட்ராசிட்டி வீடியோ

கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சூரி தனது குடுப்பத்தினருடன் அடிக்கும் லூட்டியை வீடியோவில் வெளியிட்டு வருகின்றார்.

Samayam Tamil 4 Apr 2020, 7:30 pm
கொரோனா வைரஸ் தொற்று இந்திய மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கியுள்ளது. அத்யாவசிய சேவையில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அரசு கூறியுள்ளது.
Samayam Tamil Soori fun with Kids


ஊரடங்கால் சினிமா நடிகர்களும் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். அப்படி இருக்கும் சமயத்தில் தன் குழந்தைகளுடன் செய்யும் சேட்டைகளை விடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் வீட்டில் தனது குழந்தைகளிடம் கெஞ்சி கூத்தாடி டிவி ரிமோட்டை வாங்கி படம் பார்க்க ஆரம்பிக்கும் அவருக்கு மகள் மேக்கப் போட ஆரம்பிக்கிறார். அவருக்கு மேக்கப் போட்டு சின்ன குழந்தை போல மாற்றிவிடுகின்றனர். குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாட ஆரம்பித்துவிட்டார் சூரி.

இன்று சூரி வெளியிட்ட மற்றொரு வீடியோவில் சூரி தனது வீட்டில் உள்ள பழைய போட்டோக்கள் அனைத்தையும் எடுத்து காட்டி தனது தாத்தா பாட்டி மற்றும் குடும்பத்தினர் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறார் சூரி.


கொரோனா ஹாலிடேஸை இப்படி குழந்தைகளுக்கு சொந்தங்கள் பந்தங்கள் பற்றி எடுத்துரையுங்கள் என மற்றவர்களுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார் சூரி.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சூரியோட பசங்க அவரை விட பெரிய நடிகர்களா இருப்பாங்க போல் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்