ஆப்நகரம்

ஹீரோக்களுக்கு அப்பாவாக நடிக்கும் காமெடியன்கள்

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியன்கள் அப்பாவாகும் டிரெண்ட் உருவாகி வருகிறது.

TNN 8 Oct 2016, 4:11 pm
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களான சரண்யா, ராதிகா, குஷ்பு, நதியா ஆகியோர் நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் அம்மாக்களாக நடித்து வந்த நிலையில் தற்போது காமெடியன்களும் அந்த டிரெண்டில் இணைந்துள்ளனர்.
Samayam Tamil comedians acting as a heroes father
ஹீரோக்களுக்கு அப்பாவாக நடிக்கும் காமெடியன்கள்


கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கும் காஷ்மோரா படத்தில் விவேக் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகும் காஷ்மோராவில் கார்த்திக்கு அப்பாவாக விவேக் நடிக்கிறார். இதற்கு முன்னதாக தோழா படத்தில் கார்த்திக்கு மாமா ரோலில் விவேக் நடித்திருந்தார்.

விவேக்கை தொடர்ந்து தனுஷிற்கு அப்பாவாக காமெடி நடிகரும், தனுஷின் நண்பருமான கருணாஸ் நடிக்கிறாராம். தனுஷ் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அவருடன் இணைந்து கருணாஸ் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இருவரும் இணைந்த நடித்த படம் உத்தமபுத்திரன்.

இவர்களைத் தொடர்ந்து இயக்குனர்களும் ஹீரோக்களுக்கு அப்பாவாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்