ஆப்நகரம்

Goundamani: தன்னை கேலி செய்த சிக்சர் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமனி!

சிக்சர் படத்தில் காமெடி நடிகர் கவுண்டமனியை கிண்டல் செய்யும் வகையில் அவரது புகைப்படம் மற்றும் வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Aug 2019, 5:28 pm
அறிமுக இயக்குநர் சாஜி இயக்கத்தில் சதீஷ், வைபவ், பாலக் லால்வானி, கலக்கப்போவது யாரு ராமர் மற்றும் டிஎஸ்கே (திருச்சி சரவணக் குமார்) ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிக்சர். முழுக்க முழுக்க காமெடி கதையையும், மாலை 6 மணிக்கு மேல் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளை இப்படம் திரைக்கு வரவுள்ளது.
Samayam Tamil Sixer legal notice


இந்த நிலையில், இப்படத்தில் காமெடி நடிகர் கவுண்டமனியின் புகைப்படத்தையும், அவரசது வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக கூறி இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர், ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Vijay: வாவ்….மாஸான அப்டேட் வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி: கைல லேப்டாப், கால்ல பந்து?

இது குறித்து காமெடி நடிகர் கவுண்டமனியின் வழக்கறிஞர் சசிகுமார் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் காலூன்றி 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் கவுண்டமனி. தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: தேசிய விருது கிடைக்காதது வருத்தமே: தனுஷ்!

Also Read This: Prabhas: சாஹோ மாஸான பொழுதுபோக்கு படம்: உமைர் சந்து விமர்சனம்!

இந்த நிலையில், சின்னத்தம்பி படத்தில் இவர் நடித்த குக் கந்தசாமி என்ற கதாபாத்திரம் பலரது பாராட்டைப் பெற்ற ஒன்று. இப்படத்தில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கவுண்டமனிக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட கவுண்டமனியின் கதாபாத்திரத்தை சிக்சர் படத்தில் தவறான முறையில் காட்டப்பட்டுள்ளது. மேலும், புகைப்படத்தையும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர்.


இன்று இப்படத்தின் டிரைலரைப் பார்த்த கவுண்டமனி, அதில், அவரது புகைப்படம் மற்றும் அவர் கூறிய வசனங்கள் ஆகியவை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வசனத்தை படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். உடனடியாக அந்தக் காட்சியை நீக்கி அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், சிக்சர் படக்குழுவினர் மீது குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்