ஆப்நகரம்

+2 ஃபெயில், சீக்கிரம் கல்யாணம்… யாருக்கும் தெரியாத ஆர்ஜே பாலாஜியின் மறுபக்கம்!?

+2 ஃபெயில், சீக்கிரம் கல்யாணம்… யாருக்கும் தெரியாத ஆர்ஜே பாலாஜியின் மறுபக்கம்!?

TOI Contributor 25 Nov 2016, 7:56 pm
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள காமெடியன்களில் நல்ல ஃபார்மில் இருப்பவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியா ஜாக்கியாக தொடங்கிய பாலாஜியின் பயணம் தற்போது மணிரத்னம் படம் வரை நீண்டிருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து புக்காகி வருகிறார். ரேடியா ஜாக்கி, நடிகர் என்பதை தாண்டி சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார். எதிர்மறையான விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும், இவரின் பயணம் அசாதாரணமானது தான்.
Samayam Tamil comedy actor rj balaji backround
+2 ஃபெயில், சீக்கிரம் கல்யாணம்… யாருக்கும் தெரியாத ஆர்ஜே பாலாஜியின் மறுபக்கம்!?


ரேடியா ஜாக்கியாக தனது பத்து வருடங்களை பாலாஜி நிறைவு செய்திருக்கிறார். ஆனால் பத்து வருடங்களுக்கு முந்தைய இவரின் வாழ்க்கையப்பற்றி எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். +2 ஃபெயிலான பாலாஜி இரண்டு வருடங்கள் கழித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அங்கு தன்னுடன் படித்த தோழியை காதலித்து தன்னுடைய 21வது வயதில் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு ரேடியோ ஜாக்கியாக வேலைக்கு சேர்ந்த இவர் தனித்துவமான பேச்சுத்திறமையால் மக்களிடம் தனியாக தெரிய தொடங்கினார்.

பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி போன்ற நடித்தாலும் நானும் ரௌடி திரைப்படம் இவரை வேறு தளத்திற்கு கொண்டு சேர்ந்தது. தற்போது இவருக்காகவே படத்திற்கு செல்லும் அளவிற்கு ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்