ஆப்நகரம்

மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்த காமெடி நடிகர் சதீஷ்?

காமெடி நடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 20 Sep 2019, 7:56 pm
கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். ஜெர்ரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சதீஷ், ஆர்யா நடிப்பில் வந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் பிரபலமானார்.
Samayam Tamil Sathish Engagement


இந்த நிலையில், சதீஷ் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், மோதிரம் மாற்றிக்கொள்ளும் விதமாகவும், மற்றொரு புகைப்படத்தில் குடும்பத்தோடு இருக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைக் கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், எப்போது திருமணம் என்ற தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிர்ச்சி சிவா, ஆர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, விஜய், விஷால், தனுஷ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள 4ஜி, அருவம், பிஸ்தா, ரங்கா, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்