ஆப்நகரம்

வெள்ளித்திரையை விட்டு சின்னத்திரைக்கு வந்த பரோட்டா சூரி!

வெள்ளத்திரையில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் சூரி, தற்போது சின்னத்திரையில் ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.

Samayam Tamil 28 Sep 2018, 5:55 pm
சினிமாவில் நடித்து வருபவர்கள் ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறையும் போது சீரியலுக்கு தாவி விடுகின்றனர். இந்நிலையில் வெள்ளத்திரையில் பிஸியாக இருந்து வரும் காமெடி நடிகர் தற்போது சின்னத்திரை சீரியல் ஒன்றில் நடித்துள்ளார்.
Samayam Tamil soori.


தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமான காமெடி நடிகர்களுள் ஒருவர் சூரி. இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘திருமணம்’ என்ற தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திருமணத்தை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த தொடரில் சித்து மற்றும் ஜனனி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.

அவர்களுடைய திருமணத்திலிருந்து சீரியல் தொடங்குவதாக காட்சி அமைத்துள்ளனராம். திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் காட்சியில் சூரி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சீரியல் இயக்குனர் கேட்டதும் மறுப்பு தெரிவிக்காமல் உடனே நடித்து கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்