ஆப்நகரம்

3டி படத்தில் நடிக்கும் யோகி பாபு?

நடிகர் யோகி பாபு 3டி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Oct 2018, 1:31 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து, நடிகர் யோகி பாபு 3டி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 3டி படத்தில் நடிக்கும் யோகி பாபு?
3டி படத்தில் நடிக்கும் யோகி பாபு?


தமிழ் சினிமாவில் தற்போது முன்னனி காமெடி நடிகராக திகழும் யோகி பாபு, சர்க்கார், விஸ்வாசம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி பாபு முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் கூர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து 3டி-யில் உருவாகும் மற்றுமொரு படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மஞ்சப்பை படத்தின் இயக்குநர் ராகவன் தயாரித்து, இயக்கும் இந்த படத்தில், யோகி பாபு வேதாளமாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ‘2.0’படத்துக்கு பிறகு முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் இது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்