ஆப்நகரம்

ஃபேஸ்புக்கில் லைவ்வான யோகி பாபுவின் தர்மபிரபு: அதிர்ச்சியில் படக்குழு?

காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த தர்மபிரபு படம் சமூக வலைதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 1 Jul 2019, 5:44 pm
வடிவேலு, விவேக், சூரி வரிசையில் எத்தனை படங்களில் நடித்து வருகிறேன் என்று அவருக்கே தெரியாத வகையில் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. இப்போது எல்லாம், சந்தானம், விவேக், சூரி, ரோபோ சங்கரை யாரும் தேடுவதில்லையாம், வேர் இஸ் யோகி பாபு என்ற அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றால் அது மிகையாகாது. ஒரு நிகழ்ச்சியில் வந்து வணக்கம் என்று சொல்லத் தொடங்கினால் போது, ரசிகர்களின் கரகோஷம் ஒலிக்கும்.
Samayam Tamil yogi babu


அப்படியிருக்கும் யோகி பாபு ஹீரோவாக, அதுவும் எமதர்மனாக நடித்த படம் தர்மபிரபு. கடந்த 28ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ரேகா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். தமிழக அரசியலை கலாய்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தான் அண்மையில் வெளியான இப்படத்தை யாரோ சமூக வலைதளங்களில் லைவ்வாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக படம் பாஜகவை விமர்சனம் செய்வது போன்று இருந்தது என்று கூறப்படுகிறது. பாஜகவிற்கு எதிரான படம் என்றும், எப்படி இப்படத்திற்கு சென்சார் குழு சான்றிதழ் வழங்கியது என்றும் பாஜகவினர் சில பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அவர்களில், யாரேனும், இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது வெறுப்பில் இருந்திருக்கலாம்? அதனால், தான் இது போன்று செய்துள்ளனர் என்று படக்குழு சந்தேகிக்கின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தமிழகம் முழுவதும் ரூ.6 கோடி வரையில் வசூல் குவித்ததும் என்றும், செங்கல்பட்டு பகுதியில் 1.15 கோடி வரையில் வசூல் குவித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் வசூலில் சாதனை படைத்த இப்படம், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை விட அதிக வசூல் குவித்துள்ளது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆம், விஜய் சேதுபதி சிந்துபாத் படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 4 நாட்களில் சென்னை சிட்டியில் ரூ.1.26 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்