ஆப்நகரம்

யோகிபாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!

விஜய்யுடன் நடிக்கவுள்ள யோகிபாபுவின் சம்பளம் எவ்வளவு என்பது தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 4:16 pm
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு. அதன் பின்னர் அவரது காமெடியை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தனர். தற்போது யோகி பாபுவின் காமெடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
Samayam Tamil yogibabu


இந்நிலையில் இயக்குனர் அட்லி, விஜய்யை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவும் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு விளையாட்டு வீரராக நடிக்கிறாராம். இவருடன் இணைந்து விளையாட்டு வீரராக காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க நடிகர் யோகி பாபுவுக்கு ரூ.80 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்