ஆப்நகரம்

இளைஞரை மிரட்டி ஆபாச படம் எடுத்த பெண் இயக்குனர்: வெளியான பகீர் தகவல்.!

இளைஞரை ஏமாற்றி ஆபாச தொடரில் பெண் இயக்குனர் நடிக்க வைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 25 Feb 2023, 8:19 pm
கேரளா திருவனந்தபுரத்தை சார்ந்தவர் லட்சுமி தீப்தா. மலையாள இயக்குனரான இவர் பல 18+ வெப்சீரிஸ்களை இயக்கியுள்ளார். நான்ஸி, செலின்றே டிடுசான் கிளாஸ் என இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து சீரிஸ்களிலும் படுக்கையறை காட்சிகள் நிரம்பி வழியும். இந்நிலையில் லட்சுமி தீப்தா மீது இளைஞர் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil லட்சுமி தீப்தா
லட்சுமி தீப்தா


லட்சுமி தீப்தா மீது திருவனந்தபுரம் வெங்கானூரை சாந்த இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த இளைஞர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு லட்சுமியை தொடர்பு கொண்டுள்ளார். அவரும் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சில டாக்குமெண்டில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதன்பின்னர் தான் இளைஞருக்கு தெரிய வந்துள்ளது அந்த சீரிஸ் ஒரு ஆபாசப் படம் என்பது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுதொடர்பாக அந்த இளைஞர் அருவிக்கரை போலீஸில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மலையாள இயக்குனர் லட்சுமி தீப்தா எனக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். இதற்காக அருவிக்கரையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்கு அழைத்து சென்றார்.

Dhruva Natchathiram:'துருவ நட்சத்திரம்' படம் குறித்து வெளியான செம்ம தகவல்: மாஸான சம்பவம்.!

அங்கு சில காட்சிகளை கூறி நடிக்கவும் வைத்து கேமராவில் பதிவு செய்தனர். அதன்பிறகு அது ஆபாச தொடர் என்பது தெரிந்து அதிலிருந்து விலக முயற்சி செய்தேன். ஆனால் இதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டி மிரட்டினார்கள். இதில் நடிக்காவிட்டால் ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அச்சுறுத்தினார்கள். இதனால் வேறு வழியின்றி நடிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த வீடியோ வெளியானால் என் எதிர்காலம் பாதிக்கப்படும்.

Vaathi:விஜய்யின் வாரிசை அடித்து நொறுக்கிய 'வாத்தி': 8 நாட்களில் இம்புட்டு வசூலா.!

இதனால் இயக்குனர் லட்சுமி தீப்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் லட்சுமி தீப்தாவை போலீசார் நேற்றைய தினம் கைது செய்து நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, ஆறு வாரங்களுக்கு ஓவ்வொரு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 9 மணி மணி முதல் 12 மணி வரை விசாரணை அதிகாரிகள் முன் லட்சுமி தீப்தா ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

காமெடியில் ஜெயித்தாரா மிர்ச்சி சிவா.?: 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' விமர்சனம்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்