ஆப்நகரம்

சூர்யாவுடன் இணையும் மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 11 May 2018, 4:32 pm
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil mohan-lal-surya


நடிகர் மோகன்லால் தமிழில் நேரடியாக நடித்த படம் ‘ஜில்லா’. இந்தப் படத்தில் விஜய் மகனாகவும், மோகன்லால் அப்பா கேரக்டரிலும் நடித்திருந்தனர். தற்போது மோகன்லால் மீண்டும் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்கிறார். இந்த தகவலை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்