ஆப்நகரம்

சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் ஸ்பெஷல்: நெருப்புடா இசையமைப்பாளரின் மிரட்டலான இசை பயணம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Samayam Tamil 15 May 2020, 12:39 pm
2012ல் வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சந்தோஷ் நாராயணன். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்த அவர் பல ஹிட் பாடல்கள் கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.
Samayam Tamil Santhosh Narayanan


ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும், மற்ற இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும். குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள் அனைத்திலும் தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசையில் மிரட்டிவிடுவார். சூது கவ்வும், ஜிகர்தண்டா துவங்கி ரஜினியின் கபாலி படத்தில் வந்த நெருப்புடா இசை வரை அவரது பின்னணி இசை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

சந்தோஷ் நாராயணன் படத்தின் கதைக்கு தகுந்தாற்போல இசையை அமைப்பவர். அதனால் தான் அவர் தமிழில் மட்டுமே தற்போது வரை இசைமைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற மொழிகளில் இருந்து வந்த வாய்ப்புகளை மொழி தெரியாது என்கிற ஒரே காரணத்திற்காக அவர் ஏற்றுக் கொள்வதில்லை. மொழி தெரியவில்லை என்றால் கதையை ஆழமாக புரிந்து இசையமைக்க முடியாது என்பதால் தான் பல பாலிவுட் பட வாய்ப்புகளையும் சந்தோஷ் நாராயணன் நிராகரித்துள்ளார்.

அவரின் வெற்றிக்கு ரகசியமே இதுதான். படத்தின் கதையை ஆழமாக உள்வாங்கி அதற்கு தகுந்தாற்போல பாடல்களை கொடுப்பவர் சந்தோஷ். உதாரணத்திற்கு பரியேறும் பெருமாள் படத்தில் வந்த கருப்பி, வடசென்னை படத்தில் வந்த பாடல்களை குறிப்பிடலாம்.

இன்று சந்தோஷ் நாராயணனின் 37வது பிறந்தநாள். அதற்காக அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது இசையமைப்பில் வெளிவந்த பாடல்களில் நம் மனம் கவர்ந்த சில பாடல்களை பற்றி பார்ப்போம்.

கபாலி படத்தின் நெருப்புடா பாடல் - மேலே குறிப்பிட்டது போல கதையை உள்வாங்கி ஹீரோ இருக்கும் நிலைக்கு தகுந்தார்போல உருவாக்கப்பட்ட பாடல் இது என கூறலாம். பல வருடங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வரும் ரஜினி எப்படிப்பட்டவர் என்பதை இரண்டே நிமிடங்களில் இந்த பாடல் நம் மனதில் பதியவைத்துவிடும். 'நெருப்பு டா.. நெருங்கு டா பாப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்.. அடிக்கிற அழிக்கிற எண்ணம்.. முடியுமா நடக்குமா இன்னும்.. அடக்குனா அடங்குற ஆளா நீ.. இழுத்ததும் பிரியுற நூலா நீ.. தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ.. விடியல விரும்பிடும் கபாலி... கபாலி" என பாடல் வரிகளில் அருண்ராஜா காமராஜா மிரட்டியிருப்பார்.

பரியேறும் பெருமாள் படத்தின் கறுப்பி பாடல் ஒரு நாய் மற்றும் மனிதனுக்கு இடையே உள்ள அன்பை உருக்கமாக கூறியிருந்தது. இசையமைத்தது மட்டுமின்றி அந்த பாடலில் ராப் பகுதியை சந்தோஷ் நாராயணன் தான் பாடியிருந்தார். பரியேறும் பெருமாள் மிகப்பெரிய ஹிட் ஆனது, அதே போல இந்த பாடலும் வைரல் ஹிட் என்பதை மறுப்பதற்கில்லை.

வடசென்னை படத்தில் வரும் என்னடி மாயாவி நீ பாடல் காதல் சொட்ட சொட்ட பாடகர் சித் ஸ்ரீராம் பாடியது. சந்தோஷ் இசையில் இளைஞர்களை வெகுவாக பாடல் இது. சந்தோஷ் நாராயணனுக்கு இசைமைப்பாளராக இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் இந்த பாடலுக்கு வரிகள் எழுத்தியிருந்தார்.

இப்படி சந்தோஷ் நாராயணனின் சிறந்த பாடல்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும். அடுத்து அவரது இசையில் ஜெகமே தந்திரம், தனுஷின் 'கர்ணன்' போன்ற பல பாடங்களை கைவசம் வைத்துள்ளார். நெருப்புடா இசையமைப்பாளரின் மிரட்டலான இசை பயணம் தொடரட்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்