ஆப்நகரம்

தேசிய கட்சியில் சேர கரீனா கபூர் கட்சி மேலிடம் அழைப்பு!

தேசிய கட்சியான காங்கிரசில் சேர பிரபல நடிகையான கரீனா கபூருக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2019, 3:31 pm
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் இந்தி ஹீரோ சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பட்டோடியின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை கரீனா கபூரை, போபால் தொகுதியில் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று போபால் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
Samayam Tamil kareena


போபால் காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் கூறும்போது, ‘’ கடந்த 25-&30 வருடமாக போபாலில் காங்கிரஸ் வென்றதே இல்லை. பாஜகவி டம் இருந்து இந்த தொகுதியை கைப்பற்ற ஒரு புதுமுகத்தை களமிறக்கலாம் என்பது எங்கள் எண்ணம். கரீனா கபூர், இந்த மண்ணின் மருமகளாகி விட்டார்.

அதனால், அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதை ராகுல் காந்திக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை கரீனாவும் ஏற்பார் என்று நம்புகிறோம்‘’ என்றார். இந்நிலையில், தனக்கு அரசியல் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்