ஆப்நகரம்

குக் வித் கோமாளி புகழ்: அப்பாவாகிட்டேன்: திருமணமான 3 மாதத்திற்குள் கையில் குழந்தையுடன் புகழ்

குக் வித் கோமாளி புகழ் திருமணமான மூன்று மாதத்திற்குள் தந்தையாகிவிட்டார். தன் செல்லப் பிள்ளைக்கு தாலாட்டு பாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 22 Nov 2022, 1:21 pm
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தன் பிள்ளையை அறிமுகம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil cooku with comali fame pugazh welcomes baby
குக் வித் கோமாளி புகழ்: அப்பாவாகிட்டேன்: திருமணமான 3 மாதத்திற்குள் கையில் குழந்தையுடன் புகழ்


புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அவரின் காமெடியை பலரும் ரசித்தார்கள். இதையடுத்து புகழை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. வரும் வாய்ப்பை ஏன் வீணடிக்க வேண்டும் என்று படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

பென்சியா

பென்சியா என்கிற பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து காதலை வீட்டில் சொல்லி சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வைத்து பென்சியாவின் கழுத்தில் தாலி கட்டினார். கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அவர்களின் திருமணம் நடந்தது.

தந்தை

திருமணமான மூன்று மாதத்தில் செல்லத்திற்கு தந்தையாகியிருக்கிறார் புகழ். ஒரு நாய்க்குட்டியை வாங்கியிருக்கும் புகழ் அந்த செல்லத்திற்கு இகிமுஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். தான் இகிமுஸுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தெய்வத்திருமகள் படத்தில் வந்த ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டிருக்கிறார்.

javascript-Instagram

View this post on Instagram A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

வாழ்த்து

இகிமுஸுக்கு தந்தையான புகழுக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இகிமுஸ் வந்தது இருக்கட்டும் ஜூனியர் புகழ் எப்பொழுது வருவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விரைவில் குட் நியூஸ் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

மூன்று முறை திருமணம்

முன்னதாக புகழுக்கும், பென்சியாவுக்கும் மூன்று முறை திருமணம் நடைபெற்றது. முதல் முறையாக பெரியார் பதிப்பகத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு விநாயகர் கோவிலில் நடந்தது. பின்னர் பென்சியாவின் குடும்பத்தாருக்காக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. நான்காவது முறையாகவும் திருமணம் செய்து கொள்ள தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார் புகழ். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

காதல்

பென்சியாவை காதலித்ததை ரகசியமாக வைத்திருந்தார் புகழ். ஒரு முறை பென்சியாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து சின்னத்திரை பிரபலங்கள் சிலர் கல்யாணம் எப்பொழுது என்று கேள்வி எழுப்பினார்கள். அதன் பிறகே புகழுக்கு காதலி இருப்பது தெரிய வந்தது. அடேங்கப்பா, காதலை இந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருந்திருக்கிறாரே என்றார்கள் ரசிகர்கள்.

கெரியர்

2022ம் ஆண்டில் கோலிவுட்டில் படுபிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் புகழ். அவர் கையில் ஆறு படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் பிசியாக இருப்பதால் சின்னத்திரையில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார் புகழ்.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்