ஆப்நகரம்

vikram கொரோனாவால் கோப்ராவுக்கு ஏற்பட்டுள்ள நிலை - பத்திரமா ஊர் வந்து சேருங்கப்பா!

ரஷ்யாவின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த கோப்ரா படக்குழு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Samayam Tamil 12 Mar 2020, 4:52 pm
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. விக்ரம் உட்பட நடிகர்கள் பலர் இந்த படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருப்பதால், இந்த படக்குழுவினருக்கு என்னதான் பிரச்சனை, ஏன் இந்த நேரத்தில் உயிரை பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பலர் பேசி வந்தனர். எனினும் கோப்ரா படக்குழு அசராமல் படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அஜய் ஞானமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cobra


பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், கோப்ரா படக்குழுவுடன் ஊருக்கு திரும்பவுள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,


இந்திய அரசின் பயண தடை விதியின் காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு நாடு திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு விதி


கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உலக நாடுகளுக்கிடையேயான பயணத்தை ரத்து செய்ய இந்திய மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

நடப்பில் இருக்கும் விசா அனுமதியையும் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. இந்த விதிமுறையின்படி, வெளிநாடுகளுக்கு தற்காலிகமாக, பணி மற்றும் சுற்றுலா காரணமாக சென்றிருப்பவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமாம். மார்ச் 13ம் தேதி 12 மணி முதல் இந்த விதி நடைமுறைப் படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால்தான், கோப்ரா படக்குழு திரும்பி வரவுள்ளதாக தெரிகிறது.


அண்ணே சட்டு புட்டுனு எடத்த காலி பண்ணுங்க




இவரது ட்வீட்டில் கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், அண்ணே சட்டு புட்டு இடத்தை காலி பன்னிட்டு இந்தியா பக்கம் வந்துருங்க.. #Corona VA அப்புறம் காலி பன்னிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனாவுக்கு அஞ்சாத கோப்ரா படக்குழு என ரைமிங்காக செய்திகளை வெளியிட்டிருந்ததை பார்த்து, அஜய் ஞானமுத்து எங்க அல்லு எங்களுக்குதான் தெரியும் என்று கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களே அது பாதியில் நின்று விட்டதே எனும் கவலையும் ரசிகர்களிடையே காணப்படுகிறது. மறுபுறம் உயிர்தான் முக்கியம். படத்தை பிறகு எடுத்துக் கொள்ளலாம் அல்லது இந்தியாவில் செட் போட்டு எடுத்துக் கொள்ளலாம் எனவும் ரசிகர்களிடையே கருத்துக்கள் நிலவி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்