ஆப்நகரம்

கொரோனா தொற்று: கமல்ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட சர்ச்சையான ஸ்டிக்கர் அகற்றம்

கமல்ஹாசன் வீட்டில் கொரோனாவால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Mar 2020, 11:10 am
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அரசு கூறியுள்ளது. அதையும் மீறி வெளியில் வந்தால் போலீஸ் லத்தியை சுழற்றுகிறது. அதற்கு பயந்தே பலரும் வீடுகளுக்குள் இருக்கின்றனர்.
Samayam Tamil Corona quarantined sticker at Kamal haasan house


மேலும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்" என கூறும் அந்த ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் நீதி மையம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


அனுமதி இல்லாமல் தவறாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசன் வீட்டில் இருந்து தாற்போது அந்த ஸ்டிக்கரை மாநகராட்சி அகற்றியுள்ளது.

சமீபத்தில் கமல் பதிவிட்டிருந்த ஒரு ட்விட்டில் தனது வீடாக இருந்த கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றி அதில் ஏழைகளுக்கு மக்கள் நீதி மையத்தின் மருத்துவர்களை கொண்டே சிகிச்சை அளிக்க விரும்புவதாக கூறியிருந்தார். அதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார் கமல். அது பற்றி அரசு இன்னும் எந்த முடிவும் கூறவில்லை.

மேலும் கொரோனவால் அரசு தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் ஏழை தினக்கூலிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு உதவாமல், அரசு பெரு முதலாளிகளுக்கு மட்டும் உதவுகிறது என குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பிறகு மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தது. அதற்கு வரவேற்பு தெரிவித்து கமல் ட்விட் செய்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்