ஆப்நகரம்

10 லட்ச ரூபாய் அளித்த சூர்யா குடும்பம்: FEFSI தலைவர் உருக்கமான அறிக்கையை பார்த்து உடனே உதவி

கொரோனாவால் சினிமா துறை முடங்கியுள்ள நிலையில் கஷ்டத்தில் உள்ள சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் சூர்யா குடும்பம் 10 லட்சம் ருபாய் வழங்கியுள்ளது.

Samayam Tamil 23 Mar 2020, 3:36 pm
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படங்கள், சீரியல்கள் உட்பட அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Suriya and Karthi


அதனால் சினிமாவை நம்பி உள்ள பல ஆயிரம் பணியாளர்கள் தற்போது வேலைஇழந்துள்ளனர். அவர்களில் பலரது குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கின்றனர் என FEFSI சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

"லைட்மேன் சங்கத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு போன் செய்து "சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் சாவாதை விட, எனக்கு கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை... நான் வேலைக்கு போகணும் சார்!" என கூறினார். அந்த துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது."

"தற்போது சினிமா துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள்ஆகியோருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். மொத்தம் உள்ள 25 ஆயிரம் பணியாளர்களில் சுமார் 15 ஆயிரம் பணியாளர்கள் ஒரு வேலை சோற்றுக்கு கூட கஷ்டப்படுபவர்களாக இருக்கிறார்கள். சுமாரான அரிசி 1250 ரூபாய்க்கு ஒரு மூட்டை அரிசி 10 ஆயிரம் பேருக்கு கொடுத்தாலும் இரண்டு கோடி ருபாய் ஆகும். அதனால் உதவுங்கள்" ஏன் அந்த அறிக்கையில் ஆர்.கே செல்வமணி கேட்டிருந்தார்.


இது பற்றி அறிந்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி குடும்பம் 10 லட்சம் ரூபாயை அளித்துள்ளனர். அவர்களுக்கு சினிமா துறையினர் நன்றி கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்