ஆப்நகரம்

பயமுறுத்தும் கொரோனா: அஜித் பட பாடலை தேடிக் கண்டுபிடித்து பார்க்கும் மக்கள்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலரும் அஜித் நடித்த பரமசிவன் பட பாடலை தேடிக் கண்டுபிடித்து பார்க்கிறார்கள்.

Samayam Tamil 27 Mar 2020, 2:27 pm
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் மதுரையில் கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உறவினர்கள்.
Samayam Tamil corona virus


இப்படி தமிழக மக்கள் கொரோனா வைரஸை நினைத்து பயந்தாலும் அது குறித்த மீம்ஸுகளை பார்த்து சிரிக்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் பி. வாசு இயக்கத்தில் அஜித், லைலா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான பரமசிவன் படத்தில் வந்த ஆச தோச பாடலை மக்கள் தேடிக் கண்டுபிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் அந்த பாடல் வரிகள். ஐட்டம் டான்ஸ் ஆடும் முமைத் கான் நான் போகாத ஊரே இல்லை, நான் பொறந்தேன் பத்தூர் காலி, வளர்ந்தேன் ஜில்லாவே காலி, சிரிச்சேன் எல்லோரும் காலி என்று சொல்லும் வரிகள் கொரோனா வைரஸ் பரவுவதை குறிக்க அப்படி நச்சுனு பொருந்துகிறது.

இந்நிலையில் தான் அந்த பாடல் வீடியோ சமூக வலைதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்படுகிறது. மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தான் அந்த வரிகளை எழுதியவர்.



பாடல் வீடியோவை பார்த்தவர்கள் முத்துக்குமார் ஒரு தீர்க்கதரிசி என்றும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே?

அடுத்த செய்தி

டிரெண்டிங்