ஆப்நகரம்

நாளை ரிலீசாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தை வெளியிட நீதிமன்றம் அதிரடி தடை.!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை சட்ட விரோதமாக இணையத்தளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 29 Sep 2022, 5:31 pm
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
Samayam Tamil பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Naane Varuvean: மீண்டும் நிரூபித்த தனுஷ் - செல்வராகவன் காம்போ: நிச்சயம் பந்தயம் அடிக்கும்.!

இந்நிலையில் நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சுமார் 20045க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படம் வெளியிட தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்