ஆப்நகரம்

‘பைரவா’, ‘சிங்கம்-3’ ஓடிய தியேட்டர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விஜய் நடித்த ‘பைரவா’, சூர்யா நடித்த ‘சிங்கம்’ ஆகிய படங்கள் திரையிட்ட தியேட்டர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 23 Jun 2017, 5:57 pm
விஜய் நடித்த ‘பைரவா’, சூர்யா நடித்த ‘சிங்கம்’ ஆகிய படங்கள் திரையிட்ட தியேட்டர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil court notice to chennai theaters
‘பைரவா’, ‘சிங்கம்-3’ ஓடிய தியேட்டர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!


விஜய் நடிப்பில் உருவான ‘பைரவா’ படமும், சூர்யா நடிப்பில் உருவான ‘சிங்கம்-3’ ஆகிய இரண்டு படங்களும் தான் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்யப்பட்ட படம். ஆனால், இந்த இரண்டு படங்களும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. ஆனால், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பார்த்த லாபத்தை தரவில்லை. மேலும் இந்தப் படத்தால் அவர்கள் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்கிலேயே அதிக கட்டணம் வைத்து டிக்கெட் விற்றுள்னர். இதனால் ‘பைரவா’, ‘சிங்கம்-3’ படத்துக்கு கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலித்தது ஏன்? காரணம் குறித்து பதிலளிக்க தியேட்டர் அதிபர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்