ஆப்நகரம்

Leo: சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்: 'லியோ' படத்தின் மாஸ் அப்டேட்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 17 May 2023, 8:55 am
விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் கோலிவுட் திரையுலகமே பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு படமாக 'லியோ' உருவாகி வருகிறது. இந்தப்படத்தை மாஸான அதிரடி ஆக்ஷன் படமாக இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். 'லியோ' படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற செய்து வருகிறது. இந்நிலையில் 'லியோ' படம் தற்போது வெளியாகியுள்ள தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil லியோ
லியோ


விஜய் கடைசியாக 'வாரிசு' படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு மொழியில் கடந்த பொங்கல் ரிலீசாக வம்சி பைடிபள்ளி இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, ஷியாம், சங்கீதா உள்ளிட்ட எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர். குடும்ப செண்டிமென்ட் படமாக ஜனவரியில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால் விஜய் ரசிகர்களுக்கும் இந்தப்படம் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதனால் விஜய் தற்போது நடித்து வரும் 'லியோ' படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப்படத்தினை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் உருவாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் 'லியோ' படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வேறு யாரும் இல்லை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தான். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில், தான் ஏற்கனவே நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் படங்களுடன் லியோ படத்தையும் இணைத்துள்ளார்.

எல்லாம் முடிஞ்சதுன்னு நினைத்தேன்: விபத்து குறித்து உருக்கமாக பேசிய பாத்திமா விஜய் ஆண்டனி.!

இதன் மூலம் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் 'லியோ' படத்தில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்களின் மேலும் எகிறியுள்ளது. 'லியோ' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் காஷ்மீரில் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. முழு வேகத்துடன் இந்தப்படத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


'லியோ' படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜய், திரிஷா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் 'கேஜிஎப் 2' வில்லன் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் 'லியோ' படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்தது எப்படி.?: பிரபலம் பகிர்ந்த தகவல்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்