ஆப்நகரம்

அம்மு அபிராமி ஹீரோயினாக நடிக்கும் பிஇ

தயாரிப்பாளர் சி வி குமார் தயாரிப்பில் பிஇ படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை அம்மு அபிராமி

Samayam Tamil 15 Feb 2020, 4:02 pm
அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன் என மிகவும் வித்தியாசமும் தனித்தன்மையுடனும் கூடிய படங்களை தயாரிக்கும் சி வி குமார், தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். அதற்கு பிஇ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Samayam Tamil nayan


சி வி குமார் தற்போது ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் 4ஜி, கலையரசன் நடித்துவரும் டைட்டானிக் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். பி இ படம், சிவி குமாரின் திருமுருகன் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் 20வது படமாகும்.


புதுமுகம் விக்கி பாஸ்கர்ராஜ் இயக்கும் இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஒருவர் அசுரன் படத்தில் நடித்த அம்மு அபிராமி. இன்னொருவர் தடம் படத்தின் ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்