ஆப்நகரம்

தமிழ் ராக்கர்ஸின் உரிமையாளரை கண்டுபிடிப்பது கடினம்: கைவிரித்த சைபர் கிரைம்!

தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை கண்டுபிடிப்பது சிரமம் என்று சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 12 Nov 2018, 5:04 pm
தமிழ் ராக்கர்ஸ்உரிமையாளர்களை கண்டுபிடிப்பது சிரமம் என்று சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Tamilrockers-co-925907101-904940-1


தமிழ் திரைத்துறையினருக்கு பெரும் சவாலாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனம் உள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் அதே தினத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்திலும் அது வெளிவந்து விடுவதால் திரைத் துறையினருக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் இயல்பாகவே எழுவதுண்டு.

செல்போனில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகுதான் தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தமிழ் ராக்கர்சில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால், பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப் விளம்பரமும் பதிவிறக்கம் செய்யப்படும்.

அந்த விளம்பரம் மூலம்தான் அவர்கள் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இந்த விளம்பரம் கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர்தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டுள்ளனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக தமிழ் ராக்கர்ஸ் இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது என்றும் தயரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்