ஆப்நகரம்

D Imman: நானும் மறுமணம் செய்து பிள்ளை பெத்துப்பேன்... சவால் விட்ட இமானின் முன்னாள் மனைவி? பிரபலம் பகீர்!

தானும் மறுமணம் செய்து கொள்வேன் என இசையமைப்பாளர் இமானின் மனைவி சவால் விட்டுள்ளதாக பிரபலம் ஒருவர் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

Samayam Tamil 21 May 2022, 1:31 pm
தானும் மறுமணம் செய்து கொள்வேன் இசையமைப்பாளர் இமானின் மனைவி சவால் விட்டிருப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil d imman monicka challenges to imman says bayilvan ranganthan
D Imman: நானும் மறுமணம் செய்து பிள்ளை பெத்துப்பேன்... சவால் விட்ட இமானின் முன்னாள் மனைவி? பிரபலம் பகீர்!



விதவை பெண்

இசையமைப்பாளர் டி இமான் கடந்த நவம்பர் மாதம் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்துவிட்டதாக டிசம்பர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். மேலும் தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் ஒரு விதவை அல்லது விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தார்.

மன்னிப்பு கேளுங்கள்... இல்லாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. நடிகர் தனுஷ் எச்சரிக்கை!

சொன்னப்படியே

சொன்னப்படியே விவாகரத்தான நான்கு மாதங்களில் விதவை பெண்ணான எமலி உபால்டை திருமணம் செய்து கொண்டார் இமான். அவர்களுக்கு திருமணம் ஆன தகவலை கேட்ட முன்னாள் மனைவியான மோனிகா, அதற்குள்ளேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டாயே, 12 ஆண்டுகளாக உனக்காகவே வாழ்ந்தது என்னுடைய முட்டாள்தனம் என்று கூறி சாடியிருந்தார்.

Aishwarya: இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க... ஐஸ்வர்யாவை திட்டி தீர்க்கும் தனுஷ் ஃபேன்ஸ்!

பயில்வான் ரங்கநாதன்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் இமானை பங்கம் பண்ணி பதிவுகளை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் இமானின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

D Imman: புதுசா வந்த 2 நாய்கள் இவங்கதான்... இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மீண்டும் டிவிட்!

மோனிகா சவால்

அதில் இமான் விதவை பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்ததை குறிப்பிட்டுள்ள பயில்வான் ரங்கநாதன், அவரது முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டு இமானுக்கு சவால் விட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது தானும் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன் என்றும் தேவைப்பட்டால் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்றும் மோனிகா கூறியதாக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

VJ Chithra: விஜே சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் கல்யாணமே நடக்கல... ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பரபரப்பு தகவல்!

நெருங்கிய நண்பர்

உண்மையிலேயே மோனிகா ரிச்சர்டு, இமானிடம் இப்படி சவால் விட்டாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமான் இரண்டாவது திருமணம் செய்துள்ள எமலியின் தந்தையான மறைந்த ஆர்ட் டைரக்டர் உபால்ட் பயில்வான் ரங்கநாதனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

VJ Chithra: விஜே சித்ரா இறந்தபோது போலீஸ் 'அதை' செய்யவில்லை... ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பகீர்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்