ஆப்நகரம்

பாடலாசிரியராக அவதாரம் எடுத்த நடன இயக்குனர்!

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முதன்முறையாக ஒரு படத்திற்கு பாடல் எழுதி, பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார்.

Samayam Tamil 23 Nov 2018, 7:15 pm
சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரபுதேவா. அதையடுத்து ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். கதாநாயகனாக ‘இந்து’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது தமிழில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
Samayam Tamil charli-chaplin


இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. இந்தப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பாடலாசிரியர் என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளார். அவர் எழுதிய ‘ ‘இவளா இவளா ரொம்ப பிடிச்சிருக்கு’ என்ற பாடல் நாளை சிங்கிள் பாடலாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் போன்ற அவதாரங்களை அடுத்து தற்போது பாடலாசிரியர் என்ற அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்