ஆப்நகரம்

தமிழர்களின் பாரம்பரிய உடையில் சென்று பத்மஸ்ரீ விருதை வாங்கிய பிரபுதேவா!

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்று ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருதை வாங்கியுள்ளார்.

Samayam Tamil 12 Mar 2019, 4:26 pm
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் கலக்கி வருபவர் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமின்றி, ஒரு டான்ஸராகவும், ஒரு இயக்குனராகவும், ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவி 2 ’ படம் விரைவில் வெளியாகவுளளது.
Samayam Tamil prabhu-deva


இந்நிலையில் இந்தாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அப்பொழுது தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார்.

மொத்தம் 58 பேருக்கு பத்ம பூஷன், பதமஸ்ரீ, விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மலையாள நடிகர் மோகன்லால், பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபுதேவா வேட்டி சட்டை அணிந்து வந்து விருதினை பெற்றுக்கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பிரபுதேவாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்