ஆப்நகரம்

Dancer Ramesh: 20 வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சோம்... அவர்தான் என் உயிர்... கதறும் இன்பவள்ளி!

Dancer Ramesh: டான்சர் ரமேஷும் தானும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து வந்ததாக கூறியுள்ளார் அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளி.

Samayam Tamil 7 Feb 2023, 3:23 pm
டான்சர் ரமேஷும் தானும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து வந்ததாக கூறியுள்ளார் அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளி.
Samayam Tamil dancer ramesh we started to love 20 years before says inbavalli
Dancer Ramesh: 20 வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சோம்... அவர்தான் என் உயிர்... கதறும் இன்பவள்ளி!


டான்சர் ரமேஷ்

​ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர் டான்சர் ரமேஷ். நடன நிகழ்ச்சியில் 42 வயதிலும் மைக்கேல் ஜாக்ஸன் ஸ்டெப்பில் அசத்தி வந்தார் டான்சர் ரமேஷ். இதன் மூலம் பெரும் பிரமான டான்சர் ரமேஷ் சமூக வலைதளங்களில் நடன வீடியோக்கள் மற்றும் டப்ஸ் மேஷ் வீடியோக்கள், ரீல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற டான்சர் ரமேஷுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ​

Rakhi Sawant: என் வாழ்க்கையை கெடுத்துட்டார்... என்னை அடித்தார்... சர்ச்சை நடிகை புகார்.. கணவர் கைது!

மாடியில் இருந்து குதித்து

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த டான்சர் ரமேஷ், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி தனது பிறந்த நாளில் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டான்சர் ரமேஷ் மரணத்திற்கு அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளிதான் காரணம் என அவரது முதல் மனைவியான சித்ரா போலீஸில் புகார் அளித்தார்.
Nayanthara: கல்யாணத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாங்களே நயன்தாரா... இனிமே அதுவும் நடக்குமா?

ரமேஷுடன் எப்படி?

இதையடுத்து டான்சர் ரமேஷ் மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார், இன்பவள்ளியிடம் விசாரணை நடத்தினர். அதில் குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால் டான்சர் ரமேஷ் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில் டான்சர் ரமேஷுக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இன்பவள்ளி.


Nayanthara: ஊதா கலர் புடவை... ஸ்லீவ்லெஸ் ஜாக்கேட்டில் திணறடிக்கும் நயன்தாரா... லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

20 ஆண்டுகளுக்கு முன்பு

அதில் தனக்கும் ரமேஷுக்குமான உறவு 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்றும், தாங்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மாரடைப்பால் மரணமடைந்ததால் ரமேஷ்தான் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார். தனக்கும் தன்னுடைய 3 மகள்களுக்கும் ரமேஷ்தான்பலமாக இருந்ததாகவும் அவரால் தங்களுக்கு எந்த வருமானமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ரமேஷுக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் குடிப்பழக்கம் மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
Kangana Ranaut warning: வீடு புகுந்து உதைப்பேன்... பிரபல நடிகரை பகிரங்கமாக மிரட்டிய கங்கனா ரனாவத்!

ரமேஷ்தான் என் உயிர்

தாங்கள் அவரிடம் பணத்தை எதிர்பார்க்காமல் இருந்ததால் தான் அவர் தங்களிடம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள்களை தனது கணவர் பல முறை அசிங்கமாக பேசியிருக்கிறார் என்றும் ஆனால் டான்சர் ரமேஷ் ஒரு முறை கூட மரியாதை குறைவாக நடந்து கொண்டதும் இல்லை பேசியதும் இல்லை என கூறியுள்ளார். மேலும் ரமேஷ்தான் தனக்கு உயிர் என்றும் அவர் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் இனிமேல் ரமேஷ் இல்லாமல் தான் எப்படி வாழப் போகிறேன் என்று தெரியவில்லை என்றும் கூறி கதறியுள்ளார் இன்பவள்ளி.

Kangana Ranaut: பொண்டாட்டிக்காக பிரபல நடிகர் என்னை வேவு பார்க்கிறார்... கங்கனா ரனாவத் பகீர்!

Dancer Ramesh Inbavalli

அடுத்த செய்தி

டிரெண்டிங்