ஆப்நகரம்

இயக்குநராகும் தனுஷ்

தமிழ் திரை உலகின் மிக முக்கிய கதாநாயகனான தனுஷ் தற்போது இயக்குநராக புது அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 5 Sep 2016, 5:17 pm
தமிழ் திரை உலகின் மிக முக்கிய கதாநாயகனான தனுஷ் தற்போது இயக்குநராக புது அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil danush going to be a director
இயக்குநராகும் தனுஷ்


தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் தனஷ் தனது முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானர்.

அதன்பிறகு தனுஷ் வளர்ச்சி திரைஉலகில் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது.நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்த தனுஷ். தற்போது தனுஷ் தனது திறமையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுகிறார் .

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாவது செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்.

தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் ராஜ்கிரண் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர்களை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், மிகவிரையில் நடிகர்களை முடிவு செய்து அறிவிக்கவுள்ளனர் படக்குழு. படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கயிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்