ஆப்நகரம்

தர்பாருக்கு நஷ்டஈடு கேட்டு நெருக்கும் வினியோகஸ்தர்கள்: போலீஸ் பாதுகாப்பு கோரும் முருகதாஸ்

தர்பார் பட நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு வினியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Samayam Tamil 6 Feb 2020, 10:45 am
தர்பார் பட நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு வினியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் போலீஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
Samayam Tamil darbar movie distributors are disturbing ar murugadoss seeks police protection
தர்பாருக்கு நஷ்டஈடு கேட்டு நெருக்கும் வினியோகஸ்தர்கள்: போலீஸ் பாதுகாப்பு கோரும் முருகதாஸ்


தர்பார்

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்த தர்பார் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது. ஆனால் தர்பார் படத்தை வாங்கிய தங்களுக்கு நஷ்டம் மட்டுமே என்று வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நஷ்டஈடு கேட்டு முருகதாஸின் அலுவலகம், ரஜினியின் வீட்டிற்கு சென்றார்கள்.

முருகதாஸ்

தர்பார் படத்திற்கு நஷ்டஈடு கேட்டு வினியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக முருகதாஸின் அலுவலகத்திற்கு சென்றபோது போலீசாரை வைத்து தங்களை விரட்டியதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். மேலும் தன் செயலுக்காக முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர்.

நஷ்டம்

லைகா நிறுவனத்திடம் கேட்டதற்கு நாங்களே நஷ்டத்தில் இருக்கிறோம் என்று கூறியது. இதையடுத்தே ரஜினியின் வீட்டிற்கு சென்றோம். ஆனால் அவர் போலீசாரை வைத்து எங்களை தடுத்து நிறுத்திவிட்டார். தர்பார் பட இசை வெளியீட்டு விழாவின்போது தர்பார் இன்னொரு பாட்ஷா என்று ரஜினியும், படம் வேற லெவலில் இருக்கும் என்று முருகதாஸும் கூறியதை நம்பி படத்தை வாங்கி ஏமாந்துவிட்டோம் என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

ரஜினி

ரஜினி அப்பா, தாத்தாவாக நடிக்கும் காலம் வந்துவிட்டது. ஆனால் அவர் இன்னும் மகள்களை விட சிறு வயது பெண்களுடன் சேர்ந்து டூயட் பாடி நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. தர்பார் படத்தை பார்த்த அனைவரும் தெரிவித்தது ரஜினியின் ஸ்டைலை தவிர அதில் ஒன்றுமே இல்லை என்பது தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்