ஆப்நகரம்

இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் பட இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ள படத்தின் டைட்டில் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Samayam Tamil 5 Nov 2019, 9:47 am
சசி குமார் நடித்த கிடாரி படம் மூலம் இசையமைப்பாளராகவும், ராஜ தந்திரம் படம் மூலம் நடிகராகவும், கோலிவுட்டில் அறிமுகமாவனர் தர்புகா சிவா.
Samayam Tamil இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் பட இசையமைப்பாளர்
இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ள படத்தின் டைட்டில் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இவர் கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இசையமைத்துள்ள அனைத்து பாடல்களுமே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மீது எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதற்கு காரணம் படத்தின் சிறந்த பாடல்கள், அதற்கு முக்கிய காரணம் தர்புகா சிவா என்று கூறப்படுகிறது.

குழந்தையை தத்தெடுக்க உதவுங்கள்': ராகவா லாரன்ஸிடம் பிக் பாஸ் காஜல் கோரிக்கை

இந்த நிலையில் நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட தர்புகா சிவா, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார்.


சிவா இயக்கியுள்ள படம் தற்போதைக்கு #MNMN என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் தொடங்கிய நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. மேலும், படத்தின் டைட்டில் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கவினை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்ட லோஸ்லியா : இந்த வீடியோவை பார்த்தீங்களா?

இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிக்கிறார். மேலும் துருவங்கள் பதினாறு, நரகாசூரன், டாக்ஸிவாலா ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுஜித் சாரங்
ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்