ஆப்நகரம்

'மறு வார்த்தை பேசாதே' மிஸ்டர் எக்ஸ் இவர்தான்!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் பெயரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNN 18 Oct 2017, 3:24 pm
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் பெயரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil darbuka siva is the music director of enai noki paayum thota
'மறு வார்த்தை பேசாதே' மிஸ்டர் எக்ஸ் இவர்தான்!


தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிருக்கும் திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தின் இசையமைப்பாளரின் பெயரை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிடாமல் மிஸ்டர் எக்ஸ் என்று மட்டும் குறிப்பிட்டுவந்தார்.

இசையமைப்பாளர் பெயரை வைத்து பாடல்கள் ஹிட்டாகவில்லை என்பதை நிரூபிக்க இப்படி ஒரு சஸ்பென்ஸ் வைத்திருந்தார். இந்நிலையில் தீபாவளியான இன்று மிஸ்டர் எக்ஸ் பெயரை அறிவித்துள்ளார் கௌதம்.

என்னை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளரின் பெயர் பலரும் கணித்தது போலவே ‘தர்புகா சிவா’தான் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ‘Maruvaarthai - Restrung Version’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்