ஆப்நகரம்

கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக டார்ஜிலிங் செல்லும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தின் ஷூட்டிங்கிற்காக டார்ஜிலிங் செல்கிறார்.

Samayam Tamil 4 Jun 2018, 3:52 pm
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தின் ஷூட்டிங்கிற்காக டார்ஜிலிங் செல்கிறார்.
Samayam Tamil Rajinikanth


கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக சிங்மரியில் உள்ள ஹெரிடேஜ் மவுண்ட் ஹெர்மான் பள்ளியில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதேபோல் குர்சியாங் ரேஞ்சர்ஸ் கல்லூரி மற்றும் மலைப் பிரதேசத்தில் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் புதன்கிழமை அன்று, ரஜினி டார்ஜிலிங் செல்கிறார். இதையடுத்து வரும் வியாழன் முதல் 150 பேர் கொண்ட குழுவினருடன் ஷூட்டிங் தொடங்குகிறது.

படப்பிடிப்பு காட்சிகளால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய மேற்குவங்க சுற்றுலாத் துறை அமைச்சர் கவுதம் தேப், டார்ஜிலிங்கில் தமிழ்ப் பட ஷூட்டிங் நடைபெறவுள்ளது.

இங்கு மக்கள் மிகவும் அமைதியாக வசித்து வருகின்றனர். படக்குழுவினருக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று கூறினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டார்ஜிலிங்கில் ஏராளமான படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

சத்யஜித்ரேவின் கஞ்சன் ஜங்கா(1962), ராஜேஷ் கண்ணா மற்றும் ஷர்மிளா தாகூரின் ஆராதனா(1969), திலிப் குமார் மற்றும் சாய்ரா பானுவின் சகினா மஹதோ(1974), அமிதாப் பச்சன் மற்றும் ரேகாவின் பர்சாத் கி ஏக் ராத்(1981), ஷாருக்கான் மற்றும் சுஷ்மிதா சென்னின் மே ஹூன் நா(2004), பரினிதா(2005), பர்ஃபி(2012) உள்ளிட்ட படங்கள் டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்டுள்ளன.

Darjeeling is set to host Rajinikanth's new movie with karthik Subbaraj.

அடுத்த செய்தி

டிரெண்டிங்