ஆப்நகரம்

புட்ட பொம்மா பாட்டுக்கு ஆடிய டேவிட் வார்னர் : அல்லு அர்ஜுன், தமன் நன்றி

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு மனைவி மற்றும் மகள் உடன் ஆடியுள்ள டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Samayam Tamil 30 Apr 2020, 2:51 pm
தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிக்பெரிய ஹிட். அந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட்டானது.
Samayam Tamil David Warner dances for Butta Bomma


ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த பட்டியலில் இணைந்திருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தான்.

தனது மனைவி மற்றும் மகள் உடன் சேர்ந்து அவர் புட்ட பொம்மா ஸ்டெப் ஆடியுள்ளார். அந்த டிக் டாக் விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த வீடியோவை இன்ஸ்டாவில் மட்டும் 2 மணி நேரத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் தமன் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து நன்றி கூறியுள்ளார்.


"இந்த உலகமே லாக்டவுனில் இருக்கும் போது, நான் உருவாக்கிய பாடல் உலகம் முழுவதும் பல மில்லியன் மற்றும் பில்லியன் மக்களை சென்றடைந்து இருக்கிறது என்பது எனக்கு ஒரு சிறந்த உணர்வு" என தமன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கத்ரீனாவின் ஷீலா கி ஜவானி பாடலுக்கு டேவிட் வார்னர் மகளுடன் ஆடிய வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram Indi has asked to also do one for you guys! 😂😂 please help me someone!!!!!! #statue A post shared by David Warner (@davidwarner31) on Apr 17, 2020 at 11:37pm PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்