ஆப்நகரம்

கருத்துக்கணிப்பில் முதலிடம் பெற்ற தொகுப்பாளினி டிடி!

ஆங்கில பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் தொகுப்பாளினி டிடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. \

Samayam Tamil 15 May 2018, 5:19 pm
ஆங்கில பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் தொகுப்பாளினி டிடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
Samayam Tamil dd1


சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்ய தர்ஷினி என்கிற டிடி. தற்போது அதிக பேர் சின்னத்திரையில் இருந்தாலும், டிடிக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் இன்னும் குறையவே இல்லை. சிறிது காலம் அவர் தொலைக்காட்சியில் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார் டிடி. தற்போது அவர் பிஸியாகிவிட்டார். விருது வழங்கும் விழா, படங்களின் ஆடியோ ரிலீஸ் போன்றவற்றில் அவர் பிஸியாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நேரத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்களால் விரும்பத்தக்க தமிழ் பிரபலம் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.. அதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் டிடி.

இவரை தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த பிரபலங்களின் பெயர் பட்டியல். திவ்யதர்ஷினி, கீர்த்தி, நக்ஷத்ரா, ரம்யா, வாணி போஜன், சைத்ரா ரெட்டி, ஆல்யா மானசா, சரண்யா, அஞ்சனா, நித்யா ராம் ஆகியோர் இதில் முதலிடம் பிடித்த திவ்ய தர்ஷினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்