ஆப்நகரம்

Thalapathy 65 விஜய்க்கு பாலிவுட்டில் இருந்து வரும் ஹீரோயின், வில்லன்?

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 26 Nov 2020, 5:28 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்த மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் விஜய். ஏப்ரல் மாதம் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே மாஸ்டர் ரிலீஸை தள்ளிப் போட்டனர். மாஸ்டர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil vijay


கதை ரொம்ப பிடிச்சிருச்சு, தளபதி 65 இயக்குநரை ஓகே பண்ண விஜய்?

இந்நிலையில் கோலமாவு கோகிலா படம் புகழ் நெல்சன் திலீப்குமார் தான் தளபதி 65 படத்தை இயக்கப் போவதாக கடந்த சில நாட்களாக பேச்சாக கிடக்கிறது. இந்த தகவலை தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.

தளபதி 65 படத்திற்கு ஹீரோயின் மற்றும் வில்லனை பாலிவுட்டில் இருந்து அழைத்து வர முடிவு செய்துள்ளார்களாம். தீபிகா படுகோனை விஜய்க்கு ஜோடியாகவும், ஜான் ஆபிரகாமை வில்லனாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தளபதி 65 படத்தை இயக்குவார் என்று சொல்லப்படும் நெல்சன் திலீப்குமார் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வேலையில் பிசியாக இருக்கிறார். அந்த பட வேலை முடிந்த பிறகு தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டீஸரை பார்த்தவர்கள் மாஸ்டர் படத்தின் கதை ஆல்டர் ஈகோ பற்றியதா என்று கேள்வி எழுப்பினார்கள். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் அருகில் ஆல்டர் ஈகோ என்கிற புத்தகம் இருந்ததையும், டீஸரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் நடந்து கொண்ட விதத்தை பார்த்தும் தான் கதையை யூகித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக மாஸ்டர் பட ட்ரெய்லர் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். டீஸர், ட்ரெய்லர் எல்லாம் ஏற்கனவே ரெடி, ரிலீஸ் தேதி தெரியாமல் அதை வெளியிட விரும்பவில்லை என்று லோகேஷ் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்