ஆப்நகரம்

நடனப் பள்ளியை நடத்தும் நடிகை!

நடிகை சுதா சந்திரன் நடன பள்ளிகளை ஆரம்பித்து அதை நிர்வகித்து வருகிறார்.

TNN 25 Jul 2016, 7:12 pm
நடிகை சுதா சந்திரன் நடன பள்ளிகளை ஆரம்பித்து அதை நிர்வகித்து வருகிறார்.
Samayam Tamil defying disability from taking over life sudha chandran
நடனப் பள்ளியை நடத்தும் நடிகை!


நடிகை சுதா சந்திரன், விபத்தில் ஒரு காலை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடும், தளராக உழைப்போடும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். ‘மயூரி’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அவர் அதில் தன் சொந்த வாழ்க்கை கதையிலேயே நடித்தார். பின்னர் இந்தி சீரியல்களில் பிசியான நடிகையானார்.

‘தெய்வம் தந்த வீடு’ சீரியல் முலம் தமிழ் சீரியலுக்கும் வந்தார்.லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை சில காலம் நடத்தி வந்தார். சேனல் நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சுதா சந்திரன் கையில் இப்போது சீரியல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் இந்தியில் நடித்த பிரபலமான தொடரான ‘நாகினி’ தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த இடைவெளியில் தான் நடத்தி வரும் நடன பள்ளிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். ‘சுதாசந்திரன் டான்ஸ் அகாடமி’ என்ற பெயரில் மும்பை அந்தேரி, நாக்பூர் மற்றும் சென்னை போரூரில் இந்த நடன பள்ளிகள் இயங்குகிறது. இங்கு பரதநாட்டியம் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத் தரப்படுகிறது. 5வயது முதல் 50 வரையிலானவர்கள் நடனம் கற்று வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்