ஆப்நகரம்

Dev Movie:‘தேவ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்திலும் ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார்.

Samayam Tamil 30 Oct 2018, 3:15 pm
தேவ் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அழகிய தேவதையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
Samayam Tamil Karthi-Rakul-preet-singh


‘தேவ்’ படத்தின் டைரக்டர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது:-

‘தேவ்’ படத்தில் கார்த்தியின் தோற்றத்தையும், காட்சி அமைப்பை பார்த்தாலே,
கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், காட்சியையும் பார்த்தாலே அது காதல் வசப்படுத்தும் வகையில் இருக்கின்றது. இந்த படத்தில் காதல் மட்டுமல்லாமல் ஒரு இளைஞன் தான் நினைத்ததை சாதிக்க எப்படிப்பட்ட சவால்களை எல்லாம் சந்திக்கிறான் என்பதை விளக்கும் படம்.

இந்த படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இவர் வெறும் டூயட் பாட என்று இல்லாமல், அவருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் அபார நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


இந்த படத்தில் கார்த்தியின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளர். ராகுல் ப்ரீத்சிங் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர். படத்தில் கார்த்திக், நிக்கி கல்ராணி சிறப்பு தோற்றத்தில் நடித்டுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து அசத்தியுள்ளார். படத்தை எஸ்.லட்சுமண் தயாரிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்